Sunday, November 12, 2017

ஒரே ஒரு ஊரில்... ஒரே ஒரு ராஜா.... - பாட்டு கேக்குறோமாம்

பொதுவா எனக்கு புதுப்பட பாடல்களை பிடிக்காது. ஆனா, பாகுபலில வரும் ஒரே ஒரு ஊரில்....  பாட்டு கேட்டதும் பிடிக்க ஆரம்பிச்சுது... எனக்கு ரொம்ம்ம்ம்ப பிடிச்ச மயில் கழுத்து கலர் சேலைல  அழகான அனுஷ்கா... அவங்களுக்கு பொருத்தமான பிரபாஸ்.... ரெண்டு பேருக்கும் உயரம், நிறம் அத்தனை பொருத்தம். அவங்களுக்குள்   அழகான காதல் கெமிஸ்ட்ரி படம் முழுக்க இருக்கும்....  அவங்க  காதலுக்கு பஞ்ச பூதங்களே சாட்சின்னு சொல்றதுக்கு ஏத்த மாதிரி இந்த பாட்டுல காற்று, நிலம், நீர், ஆகாயம், நெருப்புன்னு அழகா காட்சிப்படுத்தி இருப்பார் இயக்குனர்.  எனக்கு பிடிச்ச பாட்டை நீங்களும் கேளுங்க.. பாருங்க.
நானா நானா நானா நானா நானா   
நான நான நான நான நான நானா   
நானா நானா நானா நானா நானா   
நான நான நான நான நான நானா

ஓரே ஓர் ஊரில்
ஒரே ஓர் ராஜா


ஓரே ஓர் ஊரில்
ஒரே ஓர் ராஜா
என் காதில் காதல் சொல்லுவானா?!

ஓரே ஓர் ஆற்றில்
ஒரே ஓர் ஓடம்
தள்ளாடும் என்னை தாங்குவானா?!

வா என்று கட்டளையிட்டானா?!
முத்தத்தில் கை விலங்கிட்டானா?!
கைதாகினாள் தேவசேனா!!..சேனா...


நான நான நானா...
ஓரே ஓர் ஊரில்
ஒரே ஓர் ராஜா

ஓரே ஓர் ஊரில்
ஒரே ஓர் ராஜா
என் காதில் காதல் சொல்லுவானா?!

ஓரே ஓர் ஆற்றில்
ஒரே ஓர் ஓடம்
தள்ளாடும் என்னை தாங்குவானா?!

என் நெஞ்சில் அம்பு எய்கிறானா?!
கண் இன்றி நானும் செல்கிறேனா?!
பேச்சின்றியே தேவசேனா... சேனா...

ஒரே ஒரு ஊரில்..
ஒரே ஒரு ராஜா...

நானா நானா நானா நானா நானா   
நான நான நான நான நான நானா   
நானா நானா நானா நானா நானா   
நான நான நான நான நான நானா



படம் ; பாகுபலி 2
இசை : M. M. கீரவாணி
எழுதியவர்: மதன் கார்க்கி
நடிப்பு: பிரபாஸ், அனுஷ்கா
பாடியவர்கள்: மோஹனா, தீபு
பாடல் லிங்க்: https://www.youtube.com/watch?v=-PFTaQJhLTY
தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
நன்றியுடன்,
ராஜி

8 comments:

  1. படமும் பார்க்கவில்லை - பாடலும் கேட்டதில்லை.

    இப்போது தான் முதல் முறையாக கேட்கிறேன்.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  2. எனக்கு இந்தப் பாடலை விட தூங்க வைக்கும் தாலாட்டுப் பாடல் பிடிக்கும்.

    ReplyDelete
  3. அருமையான பாடல்
    சிறந்த காட்சி அமைப்பு
    நன்றி சகோதரியாரே
    தம +1

    ReplyDelete
  4. பாகுபலி பார்த்தேன், பாடல் கேட்டேன், ரசித்தேன். இங்கு மறுபடியும் பதிவு மூலமாக.

    ReplyDelete
  5. ரொம்ப ரொம்ப.... பிடித்த பாடல்...

    ReplyDelete
  6. நல்ல பாடல் தான் இது

    ReplyDelete
  7. நல்ல பாடல்! இதுவும் பிடிக்கும் என்றாலும் மற்றொரு பாட்டு உண்டே தாலாட்டு பாடல்...அதுவும்

    ReplyDelete
  8. முதல் முறையாகக் கேட்கிறேன்

    ReplyDelete