Tuesday, October 03, 2017

குழிப்பணியாரம் - கிச்சன் கார்னர்

மாலைல பசங்களுக்கு கொடுக்க நல்லதொரு டிஃபன்.  காரமும் இனிப்பும் செய்யலாம். எங்காவது ஊருக்கு போகும்போது செஞ்சு எடுத்துக்கிட்டு போகலாம். தொட்டுக்க எதும் தேவையில்ல. அப்படியே சாப்பிடலாம் (ஆனா, நான் மட்டும் என் பசங்களுக்கு வேர்க்கடலை சட்னி இல்லன்னா காரச்சட்னி செஞ்சு கொடுப்பேனாம்!! )

தேவையான பொருட்கள்....
அரிசி - ஒரு டம்ப்ளர்(டம்ப்ளர் விளிம்புக்குள் அரிசி இருக்கனும்)
உளுந்து -  அரிசிக்கு மேல உளுந்து வைக்கனும்.. கைல பிடிக்க கூடாது. ஆனா கோபுரமா நிக்கனும்
உப்பு
உளுந்தம்பருப்பு,
கடலைப்பருப்பு
காய்ந்த மிளகாய்
கறிவேப்பிலை
ஆப்பசோடா

அரிசி, உளுந்தை ரெண்டு மணிநேரத்துக்கு மேல ஊற வச்சு, உப்பு போட்டு நைசா அரைச்சுக்கனும்.  அரைச்ச மாவை ஆறு மணிநேரம் புளிக்க விடனும்


வாணலில எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு போட்டு சிவக்க விடனும்.

காரத்துக்கு காய்ஞ்ச மிளகாய் கிள்ளி போட்டுக்கனும்


பொடியா நறுக்கின வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கிக்கனும்...
புளிச்ச மாவுல வதக்குன வெங்காயம் சேர்த்து, ஆப்ப சோடாவும் சேர்த்து நல்லா கலக்கிக்கனும்..

குழிப்பணியார சட்டில எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும் மாவு ஊத்தி மூடி வச்சு ரெண்டு பக்கமும் சிவக்க விட்டு எடுக்கனும். சூடா இருக்கும்போதே இட்லிப்பொடி தூவி சாப்பிட்டாலும் நல்லா இருக்கும்.



மாவரைக்க என்னைப்போல சோம்பேறித்தனம் பட்டால்.. இருக்கவே இருக்கு இட்லி மாவு. நல்லா புளிச்சிருந்தா இப்படி செய்யலாம்...

இனிப்பு பணியாரத்துக்கும் இதே அளவு அரிசி உளுந்தும் போடனும். அரிசி அரைக்கும்போதே கொஞ்சம் உப்பு, வெல்லம் சேர்த்து அரைச்சுக்கனும்... ஆப்பசோடா தேவைப்பட்டா ஏலக்காய் பொடி சேர்த்து பணியாரம் சுடலாம்.... இப்பலாம் ஓட்ஸ், திணை, சாமை, குதிரைவாலின்னு விதம் விதமா பணியாரம் சுடுறாங்க. 

கேமரா உடைஞ்சிட்டதால... கடைசி படங்கள் கூகுள்ல சுட்டது...


தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
நன்றியுடன்,
ராஜி.

25 comments:

  1. அருமை. புகைப்படத்தைப் பார்த்தாலே ஆவல் வருகிறது!

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம் சாப்பிடவும் அருமையா இருக்கும். பாரம்பரிய சமையல் ஆச்சே

      Delete
  2. அருமை, நாங்க இதை குண்டுத்தோசை என்போம்.. பொதுவாக காலையில் அரைச்சு வச்சு மாலையில் சுடுவது வழக்கம், நல்லெண்ணெய் ஊத்தி ஊத்தி சுடோணும்.. நானும் எப்போதாவது செய்வதுண்டு. குண்டுத்தோசைக்கு அஞ்சாம் நம்பர் வோட்டுப் போட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. குண்டுதோசை... பேரு நல்லா இருக்கே

      Delete
  3. நீங்க சுட்டதும் கூகுள்ளே சுட்டதும் அருமையோ அருமை :)

    ReplyDelete
    Replies
    1. சாப்பிடாமயே அருமைன்னு சொல்றீகளே!

      Delete
  4. சிறு வயது முதலே எனக்கு மிகவும் பிடித்தவை
    தமன்னா பொய் சொல்லுது சகோ

    எனது தளத்தில் விடுகதை போட்டு இருக்கிறேன் நீங்கள் சரியாக சொல்வீர்கள் என்று நினைக்கிறேன் சகோ வருக....

    ReplyDelete
    Replies
    1. ஏழுக்கு அஞ்சி சொல்லி இருக்கேன்.

      ஆனாலும் என்னைய இன்னுமா இந்த ஊரு புத்திசாலின்னு நம்புது?!

      Delete
  5. தெளிவான குறிப்பு படங்கள் அருமை

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பூவிழி

      Delete
  6. சாப்பிட தூண்டும் பகிர்வு பாராட்டுகள் த.ம. வாக்குடன்

    ReplyDelete
    Replies
    1. இப்பலாம் பெரிய ஹோட்டல்களிலும் கிடைக்குது சகோ

      Delete
  7. எங்கள் வீட்டுல மிகவும் பிடித்த ஒன்று காரமும், இனிப்பும்..ஆன குழிப்பணியாரம். இப்படி ஒன்றுக்கு ஒன்று என்று உளுந்து தூக்கலாகப் போட்டுச் செய்வதுண்டு.
    மற்றொன்று என் தோழி 29 வருடங்களுக்கு முன்பு, (செட்டிநாட்டைச் சேர்ந்தவர்)...அவரது அளவு இரண்டு கப் அரிசி (இரண்டுமே இட்லி அரிசி எடுத்துக் கொள்ளலாம் அல்லது ஒரு கப் இட்லி அரிசி, ஒரு கப் பச்சரிசி என்று...) ஒரு கப் தூக்கலாக உளுந்து. உளுந்தை நன்றாக இட்லிக்கு அரைப்பது போல் அரைத்துக் கொண்டு அப்புறம் அரிசி அரைத்து கலந்து. நான் இரண்டு அளவிலுமே அதாவது ஒன்றுக்கு ஒன்று தூக்கலாகப் போட்டுச் செய்தாலும் உளுந்தை நன்றாக புஸு புஸுவென்று அரைத்து அதன் பின் அரிசி அரைத்துக் கலந்து மற்றதெல்லாம் நீங்கள் செய்திருப்பது போல் தாளித்து...வெங்காயம் சின்ன வெங்காயம் பொடிப் பொடியாக நறுக்கி, அது இல்லை என்றால்தான் பெரிய வெங்காயம்........அப்புறம் தேங்காய் கீறிப் போட்டும் செய்வதுண்டு....இரு முறையுமே நன்றாக வெளியில் கொஞ்சம் கிரிஸ்பியாக உள்ளே சாஃப்டாக வரும்....மாவு நன்றாகப் பொங்கி யிருக்க வேண்டும்...உளுந்து தூக்கலாக இருக்க வேண்டும்...செம ரெசிப்பி ராஜி!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இனி அப்படியும் செஞ்சு பார்க்கிறேன் கீதா. எங்க ஊர் பக்கம் சின்ன உள்ளி விலை அதிகம். கிலோ என்பது நூறுன்னு ஆகும். பெரிய உள்ளி கிலோ 20 வரும் அதனால முழுக்க முழுக்க பெரிய உள்ளிதான். கல்யாணம் காது குத்துக்கு மட்டும்தான் சின்ன உள்ளி வாங்குவோம்

      Delete
  8. கொஞ்சம் பார்ஷலில் அனுப்பிவிடுங்கோ அக்காச்சி)))

    ReplyDelete
    Replies
    1. ம்க்கும்... இந்தியா வந்திட்டு அக்காச்சிய பார்க்காம போன ஆளுக்குலாம் கிடையாதாம்

      Delete
  9. அட நாம இன்னும் சாப்பிடாத ஐட்டமா இருக்கே ம்ம் ஆட்டைய போட்டு முழுங்கவும் பக்கத்தில் இல்லையே ...எதுக்கு வம்பு வெக்கப் படாமா கேட்டு வாங்குவோம்......

    இங்கின ஒரு பார்சல் அனுப்புங்கோ சகோ புண்ணியமா போகும்

    ReplyDelete
    Replies
    1. இதுலாம் ஓவர். குழிப்பணியாரம் சாப்பாடலைன்னு சொல்றதுலாம்.. மிடில் ஏஜ் ஆளுங்க கண்டிப்பா சாப்பிட்டிருப்போம். கண்டிப்பா பார்சலில் அனுப்ப்பி வைக்குறேன். அப்படியே தீபாவளி பலகாரமும் சேர்த்து அனுப்புறேன்

      Delete
  10. இன்று காலை உணவு இதுதான்!த ம 10

    ReplyDelete
  11. நாட்டுக் கோடை ஸ்பெஷல் எனக்கும் பிடிக்கும் இனிப்பாக செய்தால் நெய் அப்பம் என்பர்கள் கேரளத்தில் நெய்யினால் உதடுகள் மினுக்கவும் வயிறு நிறையவும் என்பார்கள்

    ReplyDelete
    Replies
    1. கந்தரப்பம், நெய்யப்பம் எல்லாம் ஒன்னுதானேப்பா

      Delete
  12. பணியாரம்னு சொன்னாப் போதுமே. குழியில் மாவை ஊத்தாம செய்யுற பணியாரமும் இருக்கா?
    உண்மையில் தெரியாமதான் கேட்குறேன்.

    செய்முறை விளக்கம் வழக்கம்போல வெகு சிறப்பு ராஜி.

    ReplyDelete
    Replies
    1. இருக்குப்பா. எண்ணெயில் அப்படியே மாவை ஊத்தி சுட்டெடுக்குறதுக்கு பேரும் பணியாரம்தான்

      Delete