சனி, ஜூன் 03, 2017

பிரபலங்களின் கல்யாணத்துல நடந்ததை தெரிஞ்சுக்கனுமா?! கேபிள் கலாட்டா

நம்ம கல்யாண ஆல்பம், சிடி பார்க்குறதுதான் கஷ்டம். ஆனா, மத்தவங்க கல்யாணத்து ஆல்பம், சிடி பார்க்குறதுன்னா ஆர்வமா பார்ப்போம். அதும் பிரபலமானவங்க கல்யாணம் எப்படி, எங்க நடந்துச்சுன்னும், அதுக்கு யார்யார்லாம் வந்தாங்கன்னும் தெரிஞ்சுக்குறதுல எல்லாருக்கும் ரொம்ப ஆர்வமாதான் இருக்கும். நியூஸ் வாசிக்குறவங்க முதற்கொண்டு சினிமா நடிகர்கள் வரை தங்கள் கல்யாண அனுபவங்களை ஜீ டிவி என் ஆட்டோகிராஃப்ல சொல்றாங்க. அவங்க வழிஞ்ச வழிசல்கள், சம்மதம் வாங்க பட்ட பாடுகள், வெட்கம், துக்கம்ன்னு எல்லாம் கலந்த கலவையான நிகழ்ச்சி... இந்நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகுது.
Image result for vijay tv autograp
சத்தியம் டிவில தினமும் மாலை 6 மணிக்கு பசங்கன்னு ஒரு நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகுது. இதுல பசங்களுக்குன்னு சமையல், கிராஃப்ட், யோகான்னு சொல்லி தர்றாங்க. இதுமட்டுமில்லாம சாதனை செஞ்ச குழந்தைகளை பேட்டி எடுத்து போடுறாங்க. வாய்ப்பாட்டை எப்படி எளிய முறையில் மனப்பாடம் செய்யுறதுன்னு சொல்றாங்க.  இதுக்கு தொகுப்பாளரா சின்ன குழந்தைகளையே போட்டிருக்குறது கூடுதல் சிறப்பு...
அன்னன்னைக்கு நடக்குற குற்றங்களை டிவி நியூஸ்ல, பேப்பர்ல தெரிஞ்சுக்குறோ. பெரிய பெரிய கொலைகள், விபத்து, கொள்ளைன்னா அதோட பின்னணி வெளில தெரிய வரும். மத்ததுலாம் ஜஸ்ட் லைக் தட்ன்னு கடந்து போவோம். அந்த மாதிரியான குற்றங்களின் பிண்ணனி, அந்த வழக்கு எந்த போக்குல போகுதுன்னு ராஜ் நியூஸ் கோப்பியம் நிகழ்ச்சில தெரிஞ்சுக்கலாம். இது, தினமும் இரவு 10 மணிக்கு பார்க்கலாம்.
அனிமல் பிளானெட்ல தினமும் மதியம் 12.30க்கு சுப்ரீம் பவர்ன்னு ஒரு நிகழ்ச்சி. எறும்பு முதற்கொண்டு யானை வரை அதோட குணாதிசயம், அதனால விளையும் நன்மைகள்ன்னு புதுக்கோணத்துல நிகழ்ச்சி ஒளிப்பரப்புறாங்க,. மிருகங்களின் பத்தி புதுப்புது விசயங்களை இந்நிகழ்ச்சில தெரிஞ்சுக்கலாம்..
வசந்த் டிவில ஊரும், பேரும்ன்னு ஒரு நிகழ்ச்சி. இதுல ஒரு ஊரின் பேர் எப்படி வந்துச்சுன்னு அந்தந்த ஊர்க்காரர்கள்கிட்ட கேட்குறாங்க. அவங்க சொதப்பி, வழியுற வழிசல் இருக்கே. அடடா! ஊரோட பெயர்க்காரணத்தை நிகழ்ச்சி வர்ணனையாளர் நகைச்சுவை நடிகர் கணேஷ் விளக்கி சொல்லி அந்தந்த ஊரின் சிறப்பை எடுத்து சொல்றார்.

மக்கள் டிவில சனிக்கிழமைதோறும் காலை 10.30க்கு பெண்மனசுன்ற நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகுது. சமூகம் சார்ந்த பிரச்சனைகள் பத்தி பெண்களோட கருத்துகளை தொலைப்பேசி வாயிலா பகிர்ந்துக்கிறாங்க.  சுற்றுச்சூழல் முதற்கொண்டு சினிமா வரை பெண்கள் கருத்துகள் அசர வைக்குது...
நன்றியுடன்,
ராஜி.

31 கருத்துகள்:

 1. டி.வி. பார்க்க எனக்கு பிடிக்காதுனு ஒரு வார்த்தை எழுதுவீங்களே... மறந்துட்டீங்களோ...
  த.ம. 2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கு விளம்பரம் பிடிக்காதுண்ணே

   நீக்கு
 2. TM 4
  எப்படியோ தமிழகர்களை மக்களை நாசம் செய்துவிட்டார்கள் நம் தலைவர்கள் வேதனையாகத்தான் இருக்கிறது

  /////நம்ம கல்யாண ஆல்பம், சிடி பார்க்குறதுதான் கஷ்டம். ஆனா, மத்தவங்க கல்யாணத்து ஆல்பம், சிடி பார்க்குறதுன்னா ஆர்வமா பார்ப்போம். //

  அடுத்தவன் கஷ்டப்படுகிறதை பார்க்கிறதில் நமக்கு அலாதி சந்தோஷம்தான்

  பதிலளிநீக்கு
 3. இதையெல்லாம் பார்க்கத்தான் ஆசை ,நேரமில்லையே :)

  பதிலளிநீக்கு
 4. இத்தனையும் பார்க்க நேரம் இருக்கா?சூப்பர் உமன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //சூப்பர் உமன்!//

   பிங்க் அமிதாப் நினைவுக்கு வருகிறார்!

   நீக்கு
  2. புரில சகோ. அது யாரு பிங்க் அமிதாப்?

   நீக்கு
 5. இவ்ளோ ப்ரொக்ராம்ஸ் போகுதா டிவில ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்னும் நிறைய புரோகிராம் இருக்கு ஏஞ்சலின்

   நீக்கு
 6. பெரும்பாலும் செய்திக்காக மட்டுமே டிவி பார்க்கிறேன். ஆதலால் நீங்கள் சொல்வதைப் பற்றி அறியமுடியவில்லை. நல்லதொரு தொகுப்பாகத் தந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல நிகழ்ச்சிகளை பார்க்கலாம்ப்பா

   நீக்கு
 7. கோப்பியம் பற்றிய அறிவிப்புகளைக் காணும்போது அதை பார்க்கவேண்டும் என்று தோன்றும். அப்புறம் சுவாரஸ்யம் போய்விடும். அவ்வப்போது அனிமல் பிளானெட் நஷனல் ஜியோகிராபிக் சேனல்கள் பார்ப்பேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோப்பியம் மாதிரி நிறைய நிகழ்ச்சிகள் வருது சகோ

   நீக்கு
 8. பதில்கள்
  1. பார்க்க சொல்லலண்ணே. தெரிஞ்சுக்க மட்டுமே இந்த பதிவு

   நீக்கு
 9. என்னதான் தொல்லைக் காட்சின்னு சொன்னாலும், சில நல்ல விஷயங்களும் வரத்தான் செய்யுது போல...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்னமும் நல்ல விசயங்கள் வருது சகோ

   நீக்கு
 10. நான் விரும்பித் தொடரும்
  தொலைக்காட்சித் தொடர்கள்
  கொலைகாரக் குடும்ப நாடகங்களுக்குப் பதில்
  இவைகளைப் பார்க்கலாம்
  பகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாடகம்லாம் பார்க்க பிடிக்காதுப்பா. ஜீ டிவில தலையணைப்பூக்கள் மட்டுமே பார்ப்பேன்.

   நீக்கு
 11. பதில்கள்
  1. வெளில போய்ட்டேன் சகோ. அதான் பதிவிட முடில. விரைவில் பதிவிடுறேன்.

   நீக்கு
 12. எல்லா தொலைக்காட்சிகளையும் கவனித்து அழகாகத் தொகுத்திருக்கீங்க... நான் காமெடி நிகழ்ச்சிகள் மட்டுமே பார்ப்பேன் :)

  பதிலளிநீக்கு
 13. நேஷனல் ஜியொகிராஃபிக் மற்றும் அனிமல் ப்ளானட் நிகழ்ச்சிகள் பார்க்கப் பிடிக்கும் பார்ப்பதுண்டு அதுவும் கணினியில்தான்....நல்ல தொகுப்பு ராஜி...

  கீதா

  பதிலளிநீக்கு