Saturday, November 28, 2015

புத்தி சொன்னா இளைஞர்கள் ஏத்துக்குவாங்களா?! - கேபிள் கலாட்டா



சன்லைஃப் சேனல்ல தினமும் மதியம் 3 மணில இருந்து 5 மணி வரை வானவில், உங்கள் சாய்ஸ், நெஞ்சை தொட்ட பாடல், கிளாசிக் பாடல்கள்ன்னு திகட்ட திகட்ட70, 80, 90களில் வந்த பாடல்களை ஒளி(லி) பரப்புறாங்க. வூட்டுக்காரர், பசங்க, நியூஸ், ஸ்போர்ட்ஸ் சேனல்ன்னு எந்த இம்சையும் இல்லாம ரசிச்சு கேக்கலாம்.

----------------------------------------------

வேந்தர் டிவில தினமும் இரவு “மூண்றாவது கண்”ன்னு ஒரு நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை 9.30க்கு ஒளிப்பரப்பாகுது.  அதிகம் அறியப்படாத ஊர்களில் சித்தர்கள் நடமாடிய இடங்கள் , வித்தியசமாய் குறி சொல்லும் இடங்கள், அமானுஷ்யமான விசயங்கள் பத்திலாம் ஒளிபரப்புறாங்க. வித்தியாசமாவும், ரசிக்கும்படியாவும் இருக்கு.  போன வாரம் முழுக்க கோவை பக்கத்துல இருக்கும் வெள்ளியங்கிரி பத்தியும், சதுரகிரி சித்தர்கள் காடு பத்தியும் போட்டாங்க. ஒருவேளை நைட்ல பார்க்க முடியாதவங்களுக்காக பகல் வேளைல 12.30வரை மறுஒளிபரப்பு பண்ணுறாங்க.

----------------------------------------------------------

மக்கள் தொலைக்காட்சியில் ”4+2” ன்னு ஞாயிறு மதியம் 11.30க்கு ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்புறாங்க. இதுல இரு சக்கர, நாலு சக்கர வண்டி பத்தி எல்லாத்தையும் அலசி காய  வைக்குறாங்க. மைலேஜ், இஞ்சின், சீட், எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க், டெக்னிக்கல் விஷயங்கள்ன்னு எல்லா விசயங்கள் பத்தியும் அழகு தமிழ்ல சொல்றாங்க. வண்டி வாங்க நினைப்பவங்க அவசியம் பாருங்க

--------------------------------------------------------------

கேப்டன் டிவில திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7.55க்கு “புத்துணர்ச்சி தரும் யோகா”ன்னு நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகுது. இதை செல்வி.லட்சுமி ஆண்டியப்பன் நடத்துறங்க. உடலை ஆரோக்கியமா வச்சுக்க தேவையான பயிற்சிகளை செஞ்சு காட்டுறாங்க, சின்னவங்க, பெரியவங்க, கர்ப்பிணிகளுக்கான யோகா பயிற்சிகளை காரண காரியங்களோடு விளக்கி பயிற்சிகளை செஞ்சும் காட்டுறாங்க. 

-----------------------------------------------------------------------

பொதிகை சேனல்ல “கல்லூரி காலங்கள்”ன்ற நிகழ்ச்சியை இறையன்பு. I.A.S அவர்கள் தொகுத்து வழங்குறார். ஒவ்வொரு மனுசனோட வாழ்க்கையில் 15 முதல் 25வரையிலான காலகட்டம் மிக முக்கியமானது. தான் பிற்காலத்துல என்னவாகனும், மேற்படிப்பு, வேலை வாய்ப்பு, இண்டர்வியூன்னு இது நீளும். இந்த காலகட்டத்தை எப்படி மேம்படுத்திக்கனும்ன்னு மாணவர்களுக்கு தனக்கே உண்டான பாணியில் எளிய நடையில் எடுத்து சொல்றார். நினைவாற்றல், தேசபக்தி, வரலாறு, பக்தி, ஆன்மீகம், கம்யூனிசம் எதை பத்தியும் பொறுமையா எடுத்து சொன்னால் இன்றைய இளைஞர்கள் புரிஞ்சுப்பாங்க. கண்டிப்பா நல்லதை ஏத்துக்குவாங்கன்னு நம்பிக்கையாய் சொல்றார். இந்த நிகழ்ச்சி வார நாட்கள்ல இரவு 10.30 முதல் 11 மணி வரை ஒளிப்பரப்பாகுது.

--------------------------------------------------------
விஜய் டிவில தினமும் காலைல 7 மணிக்கு ”பாட்டி வைத்தியம்”ன்ற நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகுது. பேருதான் பாட்டி வைத்தியமே தவிர ”ரேவதி சந்திரன்”ன்ற ஆன்டிதான் நிகழ்ச்சியை நடத்துறாங்க. இன்றைய காலகட்டத்துல சின்ன சின்ன உடல் உபாதைக்குலாம் டாக்டரை தேடிப்போய் ஆயிரக்கணக்குல செலவு பண்ணுறொம். கூட்டு குடும்பமாய் இருந்த காலத்துல வீட்டுல இருந்த பொருட்களைக் கொண்டே சின்ன சின்ன உடல் உபாதைகளை தீர்த்துக்கிட்டாங்க. ம்ம்ம்ம் எல்லாத்துக்கும் விலை கொடுக்க வேண்டி இருக்குல்ல. இனி, இந்த நிகழ்ச்சிய பார்த்து குறிப்பெடுத்து வச்சுக்கிட்டா நமக்கும் யூஸ் ஆகுமில்ல.!!

-----------------------------------------------------------------

அடுத்த வாரம் கேபிள் கலாட்டா வரும். அதுக்கு முன்ன ஒரு விசயத்தை சொல்லிக்க விரும்புறேனுங்க சகோ’ஸ். எனக்கு டிவி பார்க்க பிடிக்காது. வர்ட்ட்ட்டா!!
 

12 comments:

  1. டீ. வி. பார்க்க பிடிக்காமலே இவ்வளவே டீ. வீ நிகழ்ச்சிகளை புட்டு புட்டு வைக்கறீங்க. இன்னும் பிடித்தது என்றால் மற்ற சேனல் நிகழ்ச்சிகளும் வருமோ?

    ReplyDelete
    Replies
    1. எல்லா நிகழ்ச்சிகளும் பார்க்க பிடிக்காது சகோ! சில நிகழ்ச்சிகளை மட்டும் தேர்ந்தெடுத்து பார்ப்பேன்.

      Delete
  2. சொன்னதெல்லாம் சரி கடைசியில் பொய் எதற்க்கு ?

    ReplyDelete
  3. எனது அனுபவத்தில் டி.வி.யை முழுநேரமாக பார்ப்பவர்களால் மட்டுமே இத்தனை விவரமாக எழுத முடியும் என்பதால், கில்லர்ஜியின் கருத்தோடு நானும் ஒத்துப்போகிறேன்.
    த ம 4

    ReplyDelete
  4. கலவையான கேபிள் கலாட்டா அருமை...
    எல்லாவற்றையும் தீவிரமாக பார்ப்பவர்களால் மட்டுமே இப்படி விவரமாக எழுத முடியும் அக்கா...
    கடைசியில கொளுத்திப் போட்டுப் பார்த்திருக்கீங்க... ஹா.... ஹா... கில்லர் அண்ணா அந்த வெடியை வெடிக்க விடலை பாருங்க...

    ReplyDelete
  5. //எனக்கு டிவி பார்க்க பிடிக்காது//

    நம்பிட்டோம்!

    ReplyDelete
  6. ஆத்தாடி... இத்தனை இருக்கா...?

    ReplyDelete
  7. மேட்டர் எல்லாம் சூப்பர் க்கா அதிலும் கடைசி பன்ச் செம"எனக்கு டிவி பார்க்க பிடிக்காது. வர்ட்ட்ட்டா!!"

    ReplyDelete
  8. ஒரு விஷயம் சொல்லிக்கிறேங்க.....
    எங்கள் வீட்டில் 16 வருடங்களாக டி.வி. கிடையாது...அதனால் எந்த வருத்தமும் நட்டமும் கிடையாது...எங்களுக்கான செய்திகள் வந்தடைந்து விடுகிறது...நண்பர்கள் ஆச்சர்யப்படுவார்கள்...உண்மைதான்...டி.வி என்னும் மாயப்பெட்டியய் தூக்கி எறிந்து பாருங்கள்...இன்னும் சந்தோசங்கள் அடைவீர்கள்...

    ReplyDelete
  9. அக்காவ்.... டீவி பார்க்காமலே இவ்வளோ மேட்டர் சொல்றீங்க.. நேத்து நீயா? நானா ? சென்னை மழை பத்தினு ஒருத்தர் சொன்னாங்க.. அத பார்க்க போன்ல அலாரம் வச்சு பார்த்தேன்... கணவருக்கு ஒரே சிரிப்பு!!! டீவி பார்க்க அலாரம் வைச்ச முதல் ஆள் நீயா தான் இருக்கும்னு.. டீவியே பார்க்கலைனாலும் நமக்கு தெரிஞ்ச விஷயங்கள் அதையே பார்க்குறவங்களுக்கு தெரியாது...

    ReplyDelete
  10. டி வி பார்க்கப் பிடிக்காதா
    ஆகா
    நம்பி விட்டோம்
    தம +1

    ReplyDelete
  11. ஹஹாஹ்ஹ்

    கடைசில என்ன சொல்லிருக்கீங்க?!!! அத இன்னும் கொஞ்சம் உரக்கச் சொல்லுங்களேன் சகோ ஹஹஹஹ்...டிவி பார்க்கப் பிடிக்காது வர்ட்டா.....இத்தனையும்சொல்லிப்போட்டு அடுத்தவாரம் இன்னும் நிகச்சிகளோட வருவீங்கதானே சகோ?!!! சுவாரஸ்யமாத்தான் இருக்கு ...

    ReplyDelete