Monday, July 14, 2014

சில நொடி அலட்சியம் ஒரு உயிரையும் பறிக்கலாம் - ஐஞ்சுவை அவியல்

அலட்சியம் வேண்டாமே!:

எங்க ஊர் கடைத்தெருவில் டீக்கடை வைத்திருக்கும் அண்ணாமலைன்றவர் எங்க தெருவில் குடி இருக்கார். விடிகாலையில் கடையை திறக்க, வழக்கம்போல் முதல் நாளே பால் வாங்கி காய்ச்சி ஒரு மேஜை மேல் வச்சிருக்காங்க. அந்த வீட்டு குழந்தை டேபிளுக்கடியில் இருக்கும் தலையணையை எடுக்கப் போக, டேபிள் மேலிருந்த பால் பாத்திரம் குழந்தையின் மேல் கவிழ்ந்து, ஹாஸ்பிட்டலில் சில நாள் போராடி இறந்துடுச்சு. அதோட பேரு அபர்ணா. அதோட சேட்டை இன்னும் கண்முன்னே இருக்குது. எங்க வீட்டு பசங்கள்லாம் பெருசாகிட்டதாலே அதான் எங்க வீட்டு செல்லக்குட்டி.

பால் பாத்திரத்தை ஒரு அறைக்குள் வச்சி தாழ் போட்டிருக்கலாம். இல்ல குழந்தையை அந்தப் பக்கம் போகாம பார்த்திக்கிட்டிருந்திருக்கலாம். ஒரு சில நொடி அலட்சியத்தால் ஒரு உயிரே போகிட்டுது. அபர்ணா இறந்ததைவிட ஹாஸ்பிட்டலில் அந்த குழந்தை பட்ட வேதனைதான் கண்ணுக்குள் இருக்கு. இனி இப்படி ஒரு மரண அவஸ்தை எந்த குழந்தைக்கும் இல்லயில்ல எந்த உயிருக்கும் நேரக்கூடாதுன்னு கடவுள்கிட்ட வேண்டிக்குறேன்.

வாங்கிக் கட்டிக் கொண்டது:


ஒரு நாள் அப்புக்கிட்ட, டேய் அப்பு! சமைக்க கறிவேப்பிலை இல்ல. போய் கடைக்குப் போய் வாங்கிட்டு வாடா”ன்னு சொன்னேன். அதுக்கு போம்மா! ஸ்கூல், டியூஷன், பாட்டி வீட்டுக்குன்னு இன்னிக்குலாம் சைக்கிள்ல சுத்தி சுத்தி கால்லாம் வலிக்குது. என்னால போக முடியாது. கறிவேப்பிலை இல்லாமயே சமை. அது போட்டா மட்டும் ருசிக்கப் போகுதா?ன்னு கேட்டுட்டு டிவி பார்த்துட்டு இருந்தான்.  கொஞ்ச நேரத்தில் அவன் ஃப்ரெண்ட் வந்து, டேய் அப்பு! நம்ம மாரியம்மன் கோவிலில் லைட் மியூசிக் போட்டிருக்காங்க. வாடா போகலாம்ன்னு சொல்லி கூட்டிட்டு போய்ட்டான்.

அப்பு வீட்டுக்கு வந்ததும்,  ஏண்டா அப்பு, நான் கடைக்குப் போகச் சொன்னால் கால் வலிக்குதுன்னு சொன்னே. ஆனா, உன் ஃப்ரெண்ட் கூப்பிட்டதும், ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல இருக்கும் கோவிலுக்கு போய் வர முடியுதோ!!??ன்னு கேட்டேன். அதுக்கு அவன் சொன்ன பதிலைக் கேட்டு ஷாக்க்க்க்க்க்காகிட்டேன்....,

அம்மா நீ கடைக்குப் போகச் சொன்னது வேலை. என் ஃப்ரெண்ட் கோவிலுக்கு கூப்பிட்டது எண்டர்டெய்ன்மெண்ட். வேலை கசக்கும். எண்டர்டெய்ன்மெண்ட் இனிக்கும். இதைப் புரிஞ்சுக்கன்னு  முதல்ல”ன்னு சொன்னான்.


ஹெல்ப் ப்ளீஸ்:

ஒருஆள் கூடை நிறைய முட்டை கொண்டு செல்கிறார். அவர் மீது ஆட்டோ இடித்து, முட்டையெல்லாம் உடைந்து விட்டது. ஆட்டோகாரரிடம் என் முட்டைக்கு உள்ள பணத்தை கொடு ன்னு கேட்கிறார் முட்டைக்கு சொந்தக்காரர். அதற்கு ஆட்டோக்காரர் நீர் எத்தனை முட்டை கொன்டு வந்தீர் சொல்லும். பணம் தர்றேன்”ன்னு சொல்றார். நான் கொண்டு வந்த முட்டையை..,

 இரண்டு இரண்டாக வைத்தால் ஒன்று மீதி...,
 மூன்று மூன்றாக வைத்தாலும் ஒன்று மீதி...,
 4. 4 ஆக வைத்தாலும் 1 மீதி...,
 5 .5 அக வைத்தாலும் 1 மீதி...,
6. 6 ஆக வைத்தாலும் 1 மீதி...,

7. 7 ஆக வைத்தால் சரியாக வரும் மீதி கிடையாது.அப்படின்னா, எத்தனை முட்டைன்னு நீயே கணக்குப் பண்ணி பாருன்னு சொல்லிட்டார். ஆட்டோக்காரர் எத்தனை முட்டைன்னு தெரியாம முழிச்சுக்கிட்டு இருக்கார். தெரிஞ்சவங்க ஹெல்புங்கப்பா! ப்ளீஸ்! 
வூட்டுக்காரருக்கு டிப்ஸ்:

 சமைத்து முடித்ததும் கேஸ் ஸ்டவ் ஆறியதும், தண்ணீர் தெளித்து காட்டன் துணியால் துடைத்து, கடைசியாய் நியூஸ் பேப்பரால் துடைக்க பளிச்சுன்னு இருக்குமாம்(மாமா! மைண்ட்ல வச்சுக்கிட்டு நம்ம கிச்சனை பள பளன்னு வச்சுக்கோங்க. )

முட்டை வேக வைக்கும்போது கொஞ்சம் உப்புப் போட்டு வேக வச்சா, முட்டை உரிக்கும்போது ஓடு சுலபமா உரிக்க வரும்.

 வாழைப்பழங்கள்ல   இருந்து    வெளிவரும்      வாயுக்கள், மத்த        பழங்களை சீக்கிரமா        பழுக்க       வச்சுடும்,   அதனால,    வாழைப்பழங்களைத்     தனிக் கூடையிலதான் வைக்கனுமாம். 

துவையலுக்கு அரைக்கும்போது, மிளகாய்க்கு பதில் மிளகு சேர்த்து அரைத்தால் நல்லது. உடலுக்குள் கெட்ட கொழுப்பை சேராமல் தடுக்கும் ஆற்றல் மிளகுக்கு உண்டு. 


நம்பிக்கை..., அதானே எல்லாம்:


34 comments:

  1. நான் ஆட்டோக்காரனாக இருந்தால் யோவ் எவ்வளவு முட்டைன்னு சொல்லு, இல்லாங்காட்டி துட்டு கெடியாதுன்னு அம்பேல் ஆயிடுவேன்.

    அலட்சியம் வேண்டாமே: சிறு குழைந்தைகள் இருக்கும் வீட்டில் எச்சரிக்கையாய் இருப்பது நல்லது.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

      Delete
  2. போனாபோறாருங்க 301 முட்டைகளுக்கு காசு வாங்கிட்டு போவட்டும்.

    ReplyDelete
    Replies
    1. விடை சரிதானுங்க!

      Delete
  3. சின்னக்குழுந்தைகள் எப்பவும் துறுதுறுன்னுதான் இருப்பாங்க. நாமதான் ஜாக்கிரதையா இருக்கணும். அதுக்காக இப்படி ஒரு உயிரையே பலிவாங்குகிற அளவுக்கா இப்படி அஜாக்கிரதையா இருப்பாங்க?
    த.ம.வா. 3

    ReplyDelete
    Replies
    1. இது அஜாக்கிரதைன்னும் சொல்ல முடியாது சகோ! விதிதான். அவங்களும் பால் பாத்திரத்தை ஜாக்கிரதையா மேலதான் எடுத்து வச்சிருக்காங்க.

      Delete
  4. சிறு குழந்தைகள் இருக்கும் வீட்டில் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும்! முதல் செய்தியே கண்ணீரை வரவழைத்துவிட்டது! டிப்ஸ் அருமை! புதிருக்கு ஆறாம் வாய்ப்பாடு வரை முயன்றேன்! அஞ்சு அஞ்சா பிரிக்கும் போது தப்பாயிருச்சு! கும்மாச்சி சொல்றதுதான் கரெக்டுன்னு தோணுது! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ம்ம் குழந்தையோட வலியையும், துடிப்பையும் நேரில் பார்த்த எனக்கு எப்படி இருக்கும்ன்னு யோசிச்சு பாருங்க சகோ!

      Delete
  5. அந்த குழந்தையை நினைக்கும்போது, மனசு கல்லாகிப் போகிறது.

    அப்பு எவ்வளவு சமத்து.
    "//வேலை கசக்கும். எண்டர்டெய்ன்மெண்ட் இனிக்கும். //" - எப்படியெல்லாம் சிந்திக்கிறாங்க இந்த காலத்து பசங்க.

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம் நமமிவிட பல மடங்கு புத்திசாலிங்க. அதெல்லாம் நல்லதுக்கு யூஸ் பண்ணா நல்ல எதிர்காலம் எல்லாப் பிள்ளைகளுக்கும் உண்டு சகோ!

      Delete
  6. இதே போலத்தான் எனது சொந்த அண்ணனின் குழந்தையும் இறந்து போனது. எனது அண்ணனின் மாமனார் பிஸ்னஸ்மேன் அவர் வைத்திருக்கும் கடையில் தீபாவளிக்காக வெடிகள் வாங்கி விற்பனை செய்வார் தீபாவளி சமயம ஆதலால் நிறைய வெடிகள் வாங்கி வீட்டின் மாடி மேல் உள்ள அறையில் ரூம் முழுவது வாங்கி அடிக்கி வைத்திருந்தார், விடுமுறைக்காக சென்று இருந்த என் அண்ணன் பையனும் எனது அண்ணியின் சகோதரியின் பையனும் யாருக்கும் தெரியாமல் அந்த ரூமுக்குள் சென்று விளையாடி இருக்கிறார்கள் எப்படியோ அந்த வெடிகள் வெடிக்க ஆரம்பித்து இருக்கின்றன.வீடில் இருந்த அனைவரும் விபத்து என்று கருதி வெளியே ஒடி வந்து பார்த்த பின் தான் அவர்களுக்கு தெரிய ஆரம்பித்தது 2 குழந்தைகளை காணவில்லை என்று. தியனைப்பு வண்டிகள் வந்து அணைப்பதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. எங்கள் குடும்பத்தில் உள்ள ஒரே ஒரு ஆண் வாரிசு அந்த குழந்தை மட்டுமே... இன்று நினைத்தாலும் மனது வலிக்கத்தான் செய்கிறது

    ReplyDelete
    Replies
    1. அந்த இரன்டு பிள்ளைகளையும் நினைச்சுப் பார்க்கும்போதே மனம் கனக்குது சகோ!

      Delete
    2. படிக்கவே முடியல. கொடுமை.

      Delete
    3. மனம் கனக்கிறது.

      Delete
  7. ///துவையலுக்கு அரைக்கும்போது, மிளகாய்க்கு பதில் மிளகு சேர்த்து அரைத்தால் நல்லது. உடலுக்குள் கெட்ட கொழுப்பை சேராமல் தடுக்கும் ஆற்றல் மிளகுக்கு உண்டு. ///

    மாமோவ் இந்த துவையலை எங்க சகோ ராஜிக்கு அடிக்கடி அரைச்சு கொடுங்க......

    ReplyDelete
    Replies
    1. அப்படியே உங்க அமெரிக்க மச்சானுக்கும் பார்சல் அனுப்பிடுங்க மாமோய்!

      Delete
    2. அமெரிக்கா மச்சான் இப்பவே நாகேஷ் மாதிரி ரொம்ப ஹெவியா இருக்கார். அதுலவேற இந்த சட்னியை சாப்பிட்டா பூதக்கண்ணாடி வாங்கி அவரை பார்க்கணும்

      Delete
    3. நாங்கலாம் ”அவரை” பார்க்கனும்ன்னு அவசியமில்ல. அவரோட வொயிஃப் மட்டும் பார்த்தா போதும்.

      Delete
  8. அக்கா! நான் அப்புவோட fan ஆகிட்டேன்:)
    நீங்க கொடுத்த டிப்ஸ் ரெண்டு தெரியும். ரெண்டு தெரியாது,ட்ரை பண்றேன்:)) அவியல் துவையல் சூப்பர்!!
    தம ஆறு!

    ReplyDelete
    Replies
    1. மாங்கு, மாங்குன்னு டைப் பண்ணி பதிவுப் போடுறது நான். ஆனா, நோகாம மூக்குடைக்குற அப்புக்கு ரசிகர் மன்றமா!? பலே! பலே!

      Delete
  9. நாம இணையத்தில் உட்கார்ந்துகிட்டு பையன்கிட்டே வேலை சொன்னால் இப்படித்தான் பதில் வரும் !
    த ம 7

    ReplyDelete
  10. சிறு குழந்தைகள் நடக்கும்வரை பேசும் வரை
    நாம்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. நிஜம்தானுங்க சகோ!

      Delete
  11. இன்றைய குழந்தைகளிடம் நாம் தான் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. நிஜம்தான் அண்ணா! ஏட்டிக்கு போட்டியாய் பேசினாலும், அர்த்தத்தோடும்,கவனத்தோடும்தான் இருக்காங்க.

      Delete
  12. முதல் செய்தி - மனது கனத்தது.....

    ReplyDelete
  13. முதல் செய்தி வருத்தமான விஷயம்...

    ReplyDelete
  14. தோழி.... ஏன் வந்ததும் இப்படி ஒரு கவலையான செய்தியை வெளியிட்டீர்கள்.....
    எனக்கு இன்றிரவு துர்க்கமே வராது.
    மறக்கனும் மறக்கனும்....

    ReplyDelete
    Replies
    1. கவலையான செய்திதான் அருணா! ஆனா, கவனமா இருக்கனும்ன்னு சொல்ல வந்த சேதி!

      Delete
  15. கொதிக்கும் பால் ஊற்றி குழந்தை இறந்தது கொடுமை.
    மிளகு துவையல் நல்லாயிருக்குமா?செய்து பார்த்துட்டு சொல்லுங்க..

    ReplyDelete