Thursday, September 30, 2010

ஊருல அவன் அவன் நாப்பது,அம்பது பிள்ளைகளுக்கெல்லாம் பாடம் சொல்லிக் குடுக்குறான். ஆனால் மூணு பிள்ளைங்களுக்கு பாடம் சொல்லி குடுக்குற அவஸ்தை இருக்கே . ஐயையையையையையோ..., னு சந்தானம் மாதிரி புலம்ப வச்சுடுவாங்க என் புத்திர சிகாமணிகள். மாலை ஆறிலிருந்து எட்டு வரை அவர்களுக்கு பாடம் சொல்லித் தரவேண்டியது என் பொறுப்பு.(அதுக்கு பதிலா நான் கேரளாவுக்கு அடிமாடா போகலாம்)

அமைதியா படிச்சுக்கிட்டு, இல்லனா எழுதிக்கிட்டு இருப்பாங்க. அதை நம்பி நாமும் எதாவது ஒரு நாளிதழை கையில் எடுத்த வினாடி, இதை எழுதிக் குடு ப்ளீஸ், அப்பிடுன்னு பெருசு வந்து நிக்கும், உடனே சின்னது ஓடி வந்து எனக்கு இந்த படத்தை வரைஞ்சு குடுன்னும், கடைகுட்டியோ இந்த கணக்கை சொல்லிக் குடுன்னும். ஒருத்தருக்கு எழுதி குடுத்துட்டால், அவள்(ன்) முக்கியம், நான் முக்கியமில்லைன்னு முருகர், விநாயகர் மாம்பழத்துக்கு கோவிச்சுக்கிட்டதுப் போல் கோவிச்சுக்கும். நான் அவங்க சண்டையில பே னு முழிக்க வேண்டியதுதான்.


சரி போனால் போகுதுன்னு தமிழ் புக்கை எடு த்து படிங்க என்றால், சின்னது காச நோயை, காசாநோய் னு படிக்கும். சரி வேண்டாம் டிக்டேசன் வைக்கலாமின்னு, சின்னதையும், கடைக்குட்டியையும் கூப்பிட்டு எழுத சொன்னால், புக்குல இருக்குறதை சொன்னாதான் கோட்டை விடுராங்கலேன்னு டி.வி, திரைப்படங்களின் பெயரை சொன்னால், வேட்டைக்காரனை, வெட்டைக்காரனாக்கி(விஜய்க்கு இது தேவைதான்) விட்டாள் இளைய மகள். பேருந்து நிலையம் எழுதுடா என்றால், கடைக்குட்டி பெருந்து நிலையம் என்று எழுதுனான்.

சரி இதெல்லாம் சரிபட்டு வராது என்று எண்ணி ஆங்கில புத்தகத்தை கொண்டு வர சொன்னேன், describe the meenaakshi temple னு ஒரு கேள்வி அதுக்கு யார் கட்டினது, எங்க இருக்கு னு அரை மணி நேரமா சொல்லிக் குடுத்தேன். என் பையன் எல்லாத்துக்கும் மண்டைய மண்டைய ஆட்டி கேட்டுகிட்டு, describe meenatchi temple னா அதோட மீனிங் மட்டும்தான்னு எங்க மிஸ் சொல்லிக் குடுத்தாங்க னு சொன்னானே பார்க்கலாம்.

இல்லடா describe னா விளக்கம் இல்ல விவரி னு அர்த்தம்டா. நீ சொல்வதுப் போல் மீனிங் இஇல்லடா னு ,நானும் எவ்வளவோ போராடிப் பார்த்துட்டேன். அவன் என்னை நம்புற மாதிரியே இல்ல. என் மூத்த மகளும் நான் சொல்றதுதான் கரெக்ட் னு அவன்கிட்ட சொல்லி பார்த்துட்டா . போடி நீங்க ரெண்டு பேரும் ஒரு கட்சி அதான் அவங்களுக்கு சப்போர்ட் பண்றேன்னு அவகிட்ட சண்டைக்கு போனான் . அவள் போடான்னு போயிட்டாள். நானும் கோவம் வராத மாதிரியே எவ்வளவு நேரம் தான் நடிக்கிறது...., போடா. உன் மிஸ் தலையில இடி விழ னு மனசுக்குள் நினைச்சுக்கிட்டு (வெளில சொன்ன என்னை, அடிப்பானோ) நீயாச்சு, உன் மிஸ் ஆச்சுன்னு நான் கோவமா எழுந்து வெளில வந்துட்டேன்.


சாப்பிடும்போது, அப்பா, அம்மாக்கிட்ட இதை சொல்லி ஆறுதல் தேடிக்கலாமினு புலம்புனா, நீயும் இப்படிதான், குப்புசாமி னு எழுத சொன்னா, குப்புசமி, அமரேசன் னு எழுத சொன்னா அமரரோசன், கார்த்திகேயன் னு எழுத சொன்னா கர்த்திகொயன் னு அழுதினே, உன்னை போலதானே உன் புள்ளைங்களும் இருப்பாங்க னு சேம் சைடு கோல் போட்டாரே பார்க்கலாம்.

முப்பது வருடம் கழிச்சு உன்னாலே இந்த அவமானம் எனக்கு தேவையா? எப்படியும் நைட்டு படுக்க என் பக்கத்துலதானே வரணும் , உனக்கு இருக்கு கச்சேரி னு பயபுள்ளைய எதிர்பார்த்துகிட்டு இருக்கேன். கும், கும்முன்னு கும்ம.


No comments:

Post a Comment