Friday, August 27, 2010

நிழல் கவிதைகள்





கனாக்கால நாட்கள்
















குடைக்கு வெளியே குளிர் மழை..,
சத்தியத்தைத் தொலைத்துவிட்டு
மழைக்கு ஒதுங்கிய
அந்த சில நிமிடங்கள்...,

உள்ளே ,சில பார்வைகள்,
சில பரிமாறல்கள்,
சில கூட்டல்கள்,
சில கழித்தல்கள்...,

மழை நின்றது.....,
குடைக்கு இனி அவசியமில்லை.

நிமிடங்கள், மணிகளாயின......,
மணிகள், நாட்களாயின.....,
நாட்கள், வாரங்களாயின....,
வாரங்கள், மாதமாயின..,
மாதங்கள், வருடங்களாயின...,

ஆனாலும்,
மீண்டும் திரும்ப வரவேயில்லை
"அந்த சில நிமிடங்கள்"
ஆனாலும்,

அவ்வப்போது வந்து
நுரையீரல்களில் ஆக்சிஜன் நிரப்பிவிட்டு செல்லும்.
"அந்த சில நிமிடங்கள்"


போகட்டும்,

மீண்டும் வாழ்வில்
ஒருபோதும் திரும்ப வரவே வராத,
"அந்த கனாக் கால நாட்கள்"

1 comment:

  1. வணக்கம் நண்பரே தங்களது வலைப் பதிவினை வலைசரத்தில் அறிமுகப் படுத்தி உள்ளேன் .நன்றி
    http://blogintamil.blogspot.in/2012/03/blog-post_02.html

    ReplyDelete